sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

1


PUBLISHED ON : ஜன 29, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 29, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேட்டி: கச்சத்தீவு, காவிரி, முல்லை பெரியாறு அணை, நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்கள் முதல் டங்ஸ்டன் வரை தி.மு.க.,வின் நிலைப்பாடு இரட்டை வேடம். தமிழக பா.ஜ., தலைவர்கள், மக்களின் உணர்வை புரிந்துகொண்டு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் வலியுறுத்தியதால் டங்ஸ்டன் ஏலம் ரத்தானது. இந்த வெற்றி தேசிய ஜனநாயக கூட்டணியை சேரும்.

ரத்தானது. இந்த வெற்றி தேசிய ஜனநாயக கூட்டணியை சேரும்.

ஒருவேளை டங்ஸ்டன் திட்டம் ரத்தாகவில்லை என்றால், அந்த பழியை தேசிய ஜனநாய கூட்டணி ஏத்துக்கிட்டிருக்குமா?



தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி: காளை விடும் விழாவில், ஓடும் காளை மீது, இளைஞர்கள் சிலர் கை வைப்பர், அவ்வளவு தான். மற்றபடி பிராணிகள் வதை கிடையாது. வேலுார் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி, காளை விடும் விழாவிற்கு சில கட்டுப்பாடுகள் விதிப்பது அவசியமற்றது. தமிழகம் முழுதும் காளை விடும் விழாவிற்கு ஒரே சட்டம் தான். ஆனால், வேலுார் மாவட்டத்தில் மட்டும் கட்டுப்பாடு விதிப்பது தேவையற்றது.

எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர் போல பேசுகிறாரே... ஆட்சி மேலிடம் மீது ஏதேனும் கோபதாபமோ?



தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா பேட்டி: லஞ்சம் வாங்குவோர், ஊழல் செய்வோர், கனிம வளங்களை கொள்ளை அடிப்பவர்கள், கொலைகாரர்கள் வாழும் இந்த பூமியில், மக்களுக்கு சோறு போடும் விவசாயிகளின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது. இன்று, விஜயகாந்தை இழந்து விட்டோம் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். வரும் 2026ல் நல்ல அரசாங்கத்தை தமிழக மக்கள் ஏற்படுத்த வேண்டும்.

விஜயகாந்த் மட்டும் இன்று இருந்திருந்தால், 2026ல் அவரது தலைமையில் நல்ல அரசாங்கம் அமைஞ்சிருக்கும்... தமிழக மக்கள் கொடுத்து வச்சது அவ்வளவு தான்!



அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேட்டி: ஈ.வெ.ரா.,வை இழிவாக பேசிய சீமானை கைது செய்திருக்க வேண்டும். முதல்வரும், துணை முதல்வரும் ஈ.வெ.ரா., நினைவிடத்தில் உறுதிமொழி எடுத்துக் கொள்வது நாடகம் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அவர்கள் என்ன நாடகம் நடத்தினாலும் மக்களிடம் எடுபடாது.






      Dinamalar
      Follow us