PUBLISHED ON : பிப் 18, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:
தமிழக பா.ஜ., மூத்த தலைவரான, நடிகர் சரத்குமார் அறிக்கை: மயிலாடுதுறையில்சாராய விற்பனையை தட்டிக் கேட்ட இளைஞர்களை, சாராய வியாபாரிகள் கொலை செய்திருக்கும் சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமூகத்தில் மது, போதை பொருட்களின் பெருக்கம், இளைய சமுதாயத்தின் மீது தாக்குதல், வன்முறை, கொலை என குற்றங்கள் பெருகி வருவது வேதனைக்குரிய விஷயம்.
மது அருந்தும், சிகரெட் பிடிக்கும் காட்சிகள், கொடூர வன்முறையை காட்சிப்படுத்தும் தமிழ் சினிமாக்கள் இவருக்கு வேதனை தரலையா?
தமிழக காங்., கிராம சீரமைப்பு கமிட்டி மண்டல பொறுப்பாளர் டி.என்.அசோகன் அறிக்கை: தமிழகம் முழுதும் காங்கிரஸ் கட்சியை, கிராம அளவில் மறுகட்டமைப்பு செய்யும் பணியை, மாநில தலைமை செய்து கொண்டிருக்கிறது. அதை பாராட்ட மனமில்லாத எதிர் கோஷ்டியினர், மாநில தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை மாற்றப் போகின்றனர் என்ற தகவலை பரப்புகின்றனர்.
எல்லா கட்சியிலும் எதிர்க்கட்சிகளுக்கு தான் பதிலடி தருவாங்க... இவங்க கட்சியில மட்டும் தான், கோஷ்டிகளுக்கு பதிலடி தர்றாங்க!
தமிழக பா.ஜ., மகளிரணி தலைவர் உமாரதி பேச்சு: தமிழகத்தில் தற்போது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும் அதிகம் நடக்கின்றன. இந்த குற்றங்களை தடுக்க நடவடிக்கை இல்லை. 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர்.
தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பினாலும், அந்த இடத்தில் இவங்க கட்சியை தமிழக மக்கள் அமர வைப்பாங்களா என்பது கேள்விக்குறி தான்!

