தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 11

பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 11

பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 11

2


PUBLISHED ON : நவ 11, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 11, 2026 12:00 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேச்சு: ‘மேகதாது அணை கட்டுவதற்கு யாரிடமும் அனுமதி கேட்க தேவையில்லை. தமிழகத்திற்கு 177 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட வேண்டும் என்ற நிபந்தனையோடு, தன் சொந்த இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது’ என, கர்நாடக முதல்வர் சிவகுமார் கூறியிருப்பது பெரும் மோசடி.

சிறந்த வழக்கறிஞரான நீங்களே, சிவகுமார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, நம்ம தரப்பு நியாயத்தை நிரூபிக்கலாமே!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: தொகுதி சார்ந்த குறையை நேரில் கூறச் சென்ற ஒருவரை, துறையூர் த.வெ.க., – எம்.எல்.ஏ.,வும், துணை சபாநாயகருமான ரவிசங்கர் தாக்கும் காணொளி காட்சிகள், த.வெ.க., ஆட்சியின் அதிகாரத் திமிருக்கும், அடாவடித்தனத்துக்கும் சான்று. தேர்தல் வழக்குக்காக என் தங்கை கார்த்திகா, தம்பி இசை மதிவாணன் உள்ளிட்டவர்களை தேடிப் பிடித்து கைது செய்து சிறைப்படுத்திய த.வெ.க., அரசு இப்போது என்ன செய்யப் போகிறது?

துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு, நம்ம மாநில போலீசாருக்கு துணிச்சல் இருக்கா என்ன?

த.மா.கா., தலைவர் வாசன் பேச்சு: கர்நாடக மாநிலம், மேகதாதுவில் அணை கட்டுவதை, அம்மாநில காங்கிரஸ் அரசு தன் கவுரவமாகக் கருதுகிறது. ஆனால், இது தமிழக டெல்டா விவசாயிகளுக்கு உயிர்நாடி பிரச்னையாக உள்ளது. இப்பிரச்னை நம் உணர்வோடு கலந்ததல்ல; உயிரோடு கலந்தது. மேகதாதுவில் அணை கட்டினால், டெல்டா மண்டலம் பாலைவனம் ஆகிவிடும் சூழல் உள்ளது. மத்திய அரசும், சுற்றுச்சூழல் நிர்வாகமும், மேகதாது அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

மேகதாது அணை கட்ட இதுவரை எந்த அமைப்பும் அனுமதி தரவில்லை... இனியும் தராமல் இருக்கணும் என்றால், த.வெ.க., அரசு தடுப்பாட்டத்தை ஆரம்பிக்கணும்!

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி: ‘பிக்பாக்கெட்’ அடிக்கும் ஜேப்படி திருடனை யாராவது கண்டுபிடித்து, ‘திருடன் திருடன்’ என சத்தம் போட்டால், அவன் கூட்டத்தில் இன்னொருவரிடம் பர்சை கைமாற்றிவிட்டு, தானும் கூட்டத்தோடு சேர்ந்து, ‘திருடன் திருடன்’ என கத்துவான். ஈ.வெ.ரா., நுாலக ஊழல் விவகாரத்தில், தி.மு.க., போடும் ஜேப்படி திருடன் வேலை இனி எடுபடாது.
- ஈ.வெ.ரா., நுாலக விவகாரத்தில் முறையான விசாரணை கமிஷன் அமைத்து, முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் முகத்திரையைக் கிழித்து மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துங்க!


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us