தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 13

பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 13

பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 13


PUBLISHED ON : நவ 13, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 13, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி எம்.பி., அறிக்கை: துாத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவர் தம்பி ராஜின் இல்லத்திற்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன்.

தம்பிராஜ் கடலில் தவறி விழுந்ததும், மீன்வளத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது; ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. சக மீனவர்கள் மறுநாள் அவரது உடலை மீட்டனர். உயிருக்கு போராடிய மீனவரை மீட்க, உடனே நடவடிக்கை எடுக்காத மீன்வளத் துறையின் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

சென்னை காசிமேட்டில் ஏழு மீனவர்கள் பலியான சம்பவத்திலும், இதே குற்றச்சாட்டுகள் தான் எழுந்தன... துாக்கத்தில் இருந்து மீன்வளத் துறை விழிச்சுக்கணும்!

பா.ஜ., தமிழக பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: பொதுமக்கள் எளிதாக அணுகக் கூடியவர்களாக த.வெ.க., – எம்.எல்.ஏ.,க்கள் இருக்க வேண்டும். மக்கள் தங்களது குறைகளை எம்.எல்.ஏ.,க்களிடம் தெரிவிக்க, கோரிக்கை மனுக்களை வழங்க செல்லும் போது கட்டாயம், ‘ஹெல்மெட்’ அணிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. த.வெ.க., ஆட்சியில் மனு கொடுக்க செல்வதற்கே இத்தகைய முன்னெச்சரிக்கை தேவைப்படுவது தான் கொடுமை.

மனு கொடுக்க வந்தவரை, ‘பொளந்து கட்டிய’ துணை சபாநாயகரை கிண்டலடிக்கிறீங்க என்பது நல்லாவே தெரியுது!

பா.ஜ.,வின் தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு தமிழக தலைவர் அர்ஜுனமூர்த்தி அறிக்கை: சங்க இலக்கியங்களில் போற்றப்பட்ட செந்தில் என்ற தொன்மையான தமிழ் பெயரை கொண்ட திருச்செந்துார் முருகனை, திருச்செந்திலாண்டவர் என்ற அழகிய தமிழ் பெயரில், அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது, சுப்ரமணிய சுவாமி என்ற பெயரை நீக்கும் கோரிக்கையல்ல. தமிழின் தொன்மையான அடையாள பெயருக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்.

பூ, புஷ்பம் ரெண்டுமே ஒன்று தான்... அதன் நறுமணத்தை தான் பார்க்கணுமே தவிர, பெயரை பார்க்கக்கூடாது... அதுபோல பக்தியில் மொழி பேதங்கள் எல்லாம் பார்க்கலாமா?

பா.ஜ., தமிழக முன்னாள் தலைவர் எல்.முருகன் பேட்டி:


த.வெ.க., ஆட்சிக்கு வந்ததும், 3,000 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆறு மாத ஆட்சியில், 40 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியது தான் மிச்சம்.
- கோவை ஈ.வெ.ரா., நுாலகத்தில் நடந்த ஊழலை பார்த்த பிறகும், ‘டெண்டர்’ ரத்து குறித்து விமர்சனம் பண்றீங்களே... அந்த, 3,000 டெண்டர்கள்ல, எத்தனை 1,000 கோடி ரூபாய் மோசடி நடந்திருக்குமோன்னு யோசனை பண்ணி பார்க்க வேண்டாமா?



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us