PUBLISHED ON : நவ 19, 2026 12:00 AM

மா.கம்யூ., கட்சியின் தமிழக செயலர் சண்முகம் அறிக்கை:
விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களின் போது, 92 ஆயிரத்திற்கும் மேலானவர்கள் மீது போடப்பட்ட 600 வழக்குகளை திரும்ப பெறுவதற்கான உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம். அதேநேரம், தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய பல்வேறு தரப்பினர் மீதும் போடப்பட்ட வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும்.
முறைப்படி அனுமதி பெற்று போராட்டம் நடத்தினா ஏன் வழக்குகள் போடுறாங்க...? சட்டத்தை மீறினால் வழக்குகள் வரும்; அவற்றை எதிர்கொள்ளவும் தயாரா இருக்கணும்!
பா.ஜ., விவசாய அணி தமிழக தலைவர் ஜி.கே.நாகராஜ் பேச்சு:
தன் 12 ஆண்டு கால ஆட்சியில், 50 கோடி மக்களை ஏழ்மையில் இருந்து மீட்டிருக்கிறார் பிரதமர் மோடி. வறுமையை ஒழிப்பதாக கூறி, ஆட்சிக்கு வந்து 55 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் செய்யத் தவறிய மேம்பாடுகளை துணிச்சலுடன் நிறைவேற்றியிருக்கிறார் மோடி. ஆனால், அமெரிக்கா செல்லும் ராகுல் இந்தியாவின் பெருமை குறித்து பே சாமல் மோடியையும், இந்தியாவையும், இந்திய தொழிலதிபர்களையும் தரம் குறைத்து விமர்சிப்பதே தொடர்கதையாக இருக்கிறது.
ராகுலை, அவரது கட்சியினரே, 'காமெடியன்' மாதிரி தான் பார்க்கிறாங்க... வெளிநாடுகளில் அவர் பேசுவதை எல்லாம் யாரும், 'சீரியசா' எடுத்துக்க மாட்டாங்க!
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா பேச்சு:
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவை பார்த்தாலே எனக்கு பயமாக இருக்கும். அவரை எப்படி அணுகுவது, என்ன பேசுவது என தெரியாது. ராஜிவும், சஞ்சய்யும், அவரை, 'மா' என அழைப்பர். ஆனால், என்னால் அப்படி அழைக்க முடியவில்லை. ஏனெனில் எனக்கு ஒரே ஒரு அம்மா தான். அது இத்தாலியில் இருந்த எனது அம்மா.
இந்திராவை ஒரு காலத்தில் காங்., கட்சியினர் எல்லாம், 'அன்னை இந்திரா'ன்னு அழைச்சாங்க... என்ன தான் நாட்டுக்கே தலைவியா இருந்தாலும், இந்திராவை நீங்க மாமியாரா மட்டும் தான் பார்த்திருக் கீங்க என்பது நல்லாவே தெரியுது!
த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிக்கை:
எங்கள் ஆட்சியின் ஆறு மாத முடிவிலேயே, 'விரைவில் தி.மு.க., ஆட்சி உதயமாகும்' என, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகிறார் என்றால், அவர் நடத்தும் குதிரை பேர முயற்சிகள் ஒவ்வொரு கட்டமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதை, தி.மு.க., நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் சொல்கிறாரா?
- இருக்கலாம்... எதுக்கும் உங்க கட்சி எம்.எல்.ஏ.,க்களை எல்லாம் பத்திரமா பார்த்துக்கோங்க!
