தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 7

பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 7

பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 7


PUBLISHED ON : நவ 07, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 07, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், திரைப்பட நடிகருமான எஸ்.வி.சேகர் அறிக்கை: தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் இல்ல திருமண விழாவில், ‘சமஸ்கிருத மந்திர ஒலி கேட்டுச்சுன்னா இப்போதும் வலிக்கிறது இதயம்’ என, திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் பேசியுள்ளார். இப்படி பேசி பேசியே தி.மு.க.,வை காலி பண்ணிட்டீங்க. தி.மு.க., இனி ஆட்சிக்கு வரக்கூடாது என்ற முயற்சியில் இப்போது இறங்கி இருக்கிறீர்கள்; வாழ்த்துக்கள்.

அப்படி என்றால், த.வெ.க.,வால் தி.மு.க., தோற்று போகலை... சுப.வீரபாண்டியன் மாதிரியான, ‘கொள்கை குன்று’கள் தான் காரணமோ?

தமிழ்நாடு பாடநுால் கழகத்தின் முன்னாள் தலைவரும், எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்க தலைவருமான கா.லியாகத் அலிகான் பேச்சு: ‘முதல்வர் விஜயின் கையால் தமிழகத்திற்கான தனிக்கொடியை ஏற்ற வேண்டும்’ என்ற தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு ஒன்றும் தவறானதல்ல. தேசிய கொடிக்கு சமமாக, தமிழின் பெருமையை போற்றக்கூடிய ஒரு கொடியை உருவாக்குவது ஒன்றும் தவறல்ல.

தேசிய கீதம், வந்தே மாதரம் இவற்றுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இருப்பதில் தவறில்லை எனும்போது, தேசியக் கொடியுடன் தமிழ்க்கொடி உருவாக்கும் சிந்தனையுடைய ஆதவ் அர்ஜுனா பாராட்டுக் குரியவர்.

இப்படி எல்லாம், ‘ஐஸ்’ வைத்து மறுபடியும் ஏதாவது வாரியத்துக்கு தலைவராக பார்க்கிறீங்களோ?

வி.சி.க., தலைவர் திருமாவளவன் அறிக்கை: தீபாவளி, பொங்கல் பண்டிகையை ஒட்டி, கட்டணத்தை ரத்து செய்து, சுங்கச்சாவடி தடுப்புகளை முழுமையாக திறந்து வைத்து தடையில்லா போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும்.

பண்டிகை கால நெரிசலை கட்டுப்படுத்த, கூடுதல் போலீஸ் துறையினரை பணியில் ஈடுபடுத்த வேண்டும். நெடுஞ்சாலைகளில், அவசர மருத்துவ உதவி மையங்களையும், கூடுதல் ஆம்புலன்ஸ்களையும் நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

நியாயமான கோரிக்கைகள் தான்... மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்!

ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் அறிக்கை:


அரசு மாதிரி பள்ளிகளுக்கு, ‘வெற்றி பள்ளிகள்’ என பெயர் மாற்றம் செய்துள்ளனர். அரசு படிப்பகத்திற்கு, ‘வெற்றி படிப்பகம்’ என மாற்றியது போல், மது பிரியர்களை மகிழ்விக்கும் வகையில், ‘டாஸ்மாக்’ என்பதை, ‘வெற்றி குடிப்பகம்’ என பெயர் மாற்ற வேண்டும். பள்ளிகளில், முதல்வர் படம் இருப்பது போல், வெற்றி குடிப்பகத்திலும், முதல்வர் படம் வைக்க வேண்டும்.
- தி.மு.க., – அ.தி.மு.க.,வினருக்கு கூட தோணாத, ‘குண்டக்க மண்டக்க’ யோசனைகள் எல்லாம் உங்களுக்கு மட்டும் எப்படி வருது?



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us