PUBLISHED ON : ஆக 20, 2025 12:00 AM

ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம.ரவிகுமார் அறிக்கை: 'முருகனின் மறு
உருவம் தான் முதல்வர் ஸ்டாலின்' என, அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
அறிவாலயத்தில் முதல்வருக்கு சிலை வைத்து, அருகே பெரிய உண்டியல் வைத்து,
திருக்கோவில் பட்டியலில் அறிவாலயத்தை சேர்த்து, ஹிந்து சமய அறநிலையத்துறை
ஏற்று நடத்த வேண்டும். அறிவாலயத்தில் இருக்கும் பணத்தை எடுத்து,
தமிழகத்தின் அனைத்து முருகன் கோவிலுக்கும் கும்பாபிஷேகம் நடத்தலாம்.
அறிவாலய சொத்துக்களில், ஹிந்து சமய அறநிலையத்துறை தங்கள் அடையாள கல்லை
நட்டு, விளம்பர பலகை வைக்க வேண்டும். விட்டா, அறிவாலயத்துக்கு
கும்பாபிஷேகமே நடத்த கிளம்பிடுவார் போலிருக்கே!
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: தமிழகத்தி ல் கடந்த எட்டு மாதங்களில் மட்டும், 3.67 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு உள்ள தாகவும், நடப்பாண்டில், 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வெளியாகி உள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. நாட்டிலேயே நாய்க்கடியில் தமிழகத்தை முதலிடத்தில் துாக்கி நிறுத்தியது தான், தி.மு.க., அரசின் நான்கு ஆண்டு கால சாதனையா?
எல்லாத்துலயும் முதலிடம்னு சொல்ற ஆட்சியாளர்கள் , நாய்க்கடியில் மட்டும் கடைசி இடத்தில் இருக்க வேண்டாம்னு நினைச்சிருப்பாங்களோ?
த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி: அ.தி.மு.க., - பா.ஜ., - த.மா.கா., என்பது வெற்றி கூட்டணி; மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்திய கூட்டணி. தமிழக மக்கள், ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். அதை ஏற்கும் கட்சிகள் எங்களுடன் இணைந்து செயல்படலாம். எங்களது தே.ஜ., கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும்; அதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும். தி.மு.க.,வுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பர்.
தே.ஜ., கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும் பட்சத்தில், முதலில் இவரது கட்சிக்கான தொகுதிகளை தான் குறைப்பாங்க!
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட மருது அழகுராஜ் அறிக்கை: ஒற்றுமையை உயிராகக் கருதுகிறார் தமிழக முதல்வர். அதனால் தான் பவள விழா காணும் தி.மு.க.,வை மேலும் மேலும் பலப்படுத்த, 'ஓரணியில் தமிழகம்' என்பதை அவர் முழக்கமாக முன்னெடுக்கிறார் . ஆ னால், உடைப்பது, சிதைப்பது, ஒட்டுமில்லை, உறவுமில்லை என கதைப்பது என்பதாக, அ.தி.மு.க.,வுக்குள் தொடர்ந்து பிளவு விழா எடுத்து வருகிறார் பழனிசாமி. ஒரு ஜல்லி உடைக்கும் இயந்திர மாகவே, கட்சியை நாசப்படுத்தி வருகிறார்.
முதல்வ ர் ஸ்டாலினை பாராட்டி தள்ளுறதால, தி.மு.க., முகாமில் அடைக்கலம் புகும் ஐடியாவில் இருக்கிறாரோ?