sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 26, 2026 ,சித்திரை 13, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

 பேச்சு, பேட்டி, அறிக்கை

/

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : ஏப் 26, 2026 12:53 AM

Google News

PUBLISHED ON : ஏப் 26, 2026 12:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேட்டி: கடந்த ஐந்தாண்டுகளாக, தி.மு.க., தந்த நல்லாட்சியால் தொடர்ந்து நாங்கள் ஆட்சி அமைப்போம். த.வெ.க., தலைவர் விஜய் ஓரளவுக்கு ஓட்டுகள் வாங்குவார். இதனால், எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தி.மு.க.,விற்கு, 150 தொகுதிகள், கூட்டணியுடன் சேர்த்து, 180 தொகுதிகள் வரை கிடைத்து, தி.மு.க.,வே மீண்டும் ஆட்சி அமைக்கும். இவரது தலைவர் ஸ்டாலின், '200 தொகுதிகளுக்கு மேல வெற்றி பெறுவோம்'னு சொன்னதுல, இவருக்கே நம்பிக்கை இல்லையோ?

.வெ.க.,வின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேட்டி: ' விஜய் வேட்பு மனுவில், 100 கோடி ரூபாய் சொத்து மதிப்பை குறைத்து காண்பித்தது முறைகேடு' என, உயர் நீதிமன்றம் கூறியுள்ளதாக பலரும் விமர்சிக்கின்றனர். யார் வேண்டுமானாலும், என்ன கருத்து வேண்டுமானாலும் கூறலாம். ஆனால், விஜயை பொறுத்த வரை துாய்மையான மனிதர்.

இறக்குமதி செய்த வெளிநாட்டு காருக்கு வரி கட்டாமல், 'டிமிக்கி' கொடுத்துட்டு, ஐகோர்ட்டில் குட்டு வாங்கிய விஜய் துாய்மையான மனிதரா?

வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சு: நடிகர் விஜய் மீது நமக்கு ஒன்றும் காழ்ப்புணர்ச்சி கிடையாது. அவர் பேச்சில் எந்த கொள்கையும், கோட்பாடும் கிடையாது. தனது கொள்கை தலைவர்கள் என விஜய் கூறுபவர்களை பற்றி ஏதாவது பேசி இருக்கிறாரா; எதுவும் இல்லை. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததற்கு நியாயமான ஒரு காரணத்தை சொல்ல முடியுமா?

தி.மு.க., ஆட்சியில், பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக பல சம்பவங்கள் நடந்தும், அந்த கூட்டணியில் இவர் நீடிப்பதற்கு நியாயமான காரணத்தை சொல்வாரா?

பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் பேட்டி: தமிழகத்தில் இரும்பு பெண்மணியாக திகழ்ந்த ஜெயலலிதாவை போல், மேலும் பல பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற நோக்கில், பார்லிமென்டில், 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை, பிரதமர் மோடி கொண்டு வந்தார். ஆனால், சாதாரண பெண்கள் அதிகாரத்திற்கு வருவதை, தி.மு.க., மற்றும் காங்., கட்சிகள் விரும்பாமல் தடுத்து நிறுத்தி விட்டன. தி.மு.க., - காங்., ஆகிய இரு கட்சிகளும் குடும்ப ஆட்சி நடத்தி வருகின்றன. இவர்கள், வேறு யாரும் அரசியலுக்கு வந்துவிடக்கூடாது என்பதில் குறியாக உள்ளனர்.

அவங்க குடும்ப அரசியல் நடத்தினாலும், தன் சகோதரி பிரியங்காவின் முன்னேற்றத்தை ராகுலும், கனிமொழியின் உயர்வை முதல்வர் ஸ்டாலினும் முடக்கிதானே வச்சிருக்காங்க!






      Dinamalar
      Follow us