தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : ஜூலை 09, 2026 12:39 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 09, 2026 12:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை:

'அ.தி.மு.க.,வில் இருந்து யார் வேண்டுமானாலும், வெளியே போகட்டும்' என பேசுவதை, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி நிறுத்த வேண்டும். கண்ணுக்கு எதிரே, பல மாவட்ட செயலர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என சாரை சாரையாக மாற்று கட் சிக்கு செல்லும்போது கூட, பொதுக்குழுவை கூட்டி விவாதிக்க முன்வராததன் காரணம் என்ன? ஒரு பெண் ஆளுமையால் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி அழிவதை தாங்க முடிய வில்லை என்ற அடிப்படையில், இதை கேட்கிறேன்.

கட்சியின் முக்கிய தலைகள் எல்லாம் வெளியே போனாலும், கட்சி சொத்துகள் மட்டும் தனக்கு போதும்னு பழனிசாமி நினைக்கிறாரோ?

காங்., கட்சியை சேர்ந்த, சென்னை மாநகராட்சி கவுன்சிலர் சிவராஜசேகரன் பேட்டி: தி.மு.க.,விலும் சரி, அ.தி.மு.க .,விலும் சரி, திராவிட கொள்கை வகுப்பாளர்களை தேடி அரவணைக்க வேண்டும். அவர்களை புறக்கணித்து விட்டு, தேர்தல் வியூக வகுப்பாளர்களின் பின் செல்லக் கூடாது. த.வெ.க., தலைமையில் சிறப்பான ஆட்சி நடக்கிறது. எனவே, அவர்களை விமர்சிக்கக் கூடாது.

'அடுத்த ஐந்து ஆண்டுகளும் த.வெ.க., சிறப்பான ஆட்சியை தந்துட்டா, நம்ம பாடு திண்டாட்டமாகிடுமே'ன்னு தானே ரெண்டு திராவிட கட்சியினரும் பயப்படுறாங்க!

தி.மு.க., வர்த்தகர் அணி செயலர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் அறிக்கை: 'தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன் மகன் சந்தீப் ஆனந்த், த.வெ.க.,விற்கு ஓடி விட்டார்' என, யாரும் பல்லில் நாக்கு போட்டு பேச முடியாது. காரணம், சந்தீப்பே சொன்னது போல, டி.ஆர்.பாலு, நேரு, பொன்முடி, துரைமுருகன் மகன்களை போல் கட்சியில் பதவி வகித்துவிட்டு மாற்று கட்சிக்கு போகவில்லை.

'மற்ற முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகளுக்கு பதவிகள் தந்தது போல, சந்தீப் ஆனந்துக்கும் தந்திருந்தா போயிருக்க மாட்டார்'னு சொல்ல வர்றீங்களா?

தி.மு.க., செய்தி தொடர்புக்கு ழு துணை தலைவர் மருது அ ழகுராஜ் அறிக்கை:

தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன், சிவசங்கர் ஆகியோரை ஓட்டுகளால் வீழ்த்த முடியாமல், வழக்கால் வதைக்கவும், முடிந்தால் வளைக்கவும், த.வெ.க., ஆடும் பரமபதமே, காக்கி போலீசாரை ஆள் துாக்கும், 'ஜாக்கி'களாக மாற்றுவது. ஆனால், 'மிசா'வையே பார்த்த தி.மு.க., வுக்கு, 'மீம்ஸ்' கட்சி எல்லாம் எம்மாத்திரம்?

தேர்தலுக்கு முன்னாடி, த.வெ.க., பற்றி இப்படி அலட்சியமாக பேசியதன் விளைவை இன்று அனுபவிக்கிறீங்க... இனியும் அலட்சியப்படுத்தினால், நிலவரம் மேலும் கலவரமாகும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us