தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : ஜூலை 18, 2026 01:29 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 18, 2026 01:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னாள் அமைச்சரும், திருச்செந்துார் தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி: விவசாயம் செழிக்க வேண்டி, விவசாயிகள் நேர்த்திக்கடனாக நெல், வாழைத்தார், வெற்றிலை, தேங்காய் போன்ற விளைபொருட்களை, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில், சண்முக விலாச மண்டபத்தில் முருகனுக்கு காணிக்கையாக செலுத்தும் நிகழ்வு, பல நுாற்றாண்டுகளாக நடந்து வருகிறது. இந்த சண்முக விலாச மண்டபம், 'கிரில் கேட்' போட்டு அடைக்கப்பட்டுள்ளது. இதை அகற்றக்கோரி, என் தலைமையில் வரும் 22ம் தேதி, கோவில் முன் 5,000 பக்தர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

நிஜமாகவே பக்தர்கள் மீதான அக்கறையா அல்லது திருச்செந்துார்ல என்னை மீறி எதுவும் நடக்கக்கூடாதுன்னு காட்டிக்க நினைக்கிறாரா?

பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதை பொருட்கள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த வேளையில், இந்த ஆண்டிற்கான போலீசார் நியமனத்தை, அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைப்பதாக, தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது, கடும் கண்டனத்திற்குரியது.

இந்த தாமதம், ஏற்கனவே இருக்கும் போலீசாருக்கு கூடுதல் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தை தருமே!

முன்னாள் அமைச்சரும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான சிவசங்கர் பேட்டி: ஏற்கனவே சிறப்பாக செயல்பட்ட, தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சியின் திட்டங்களை, தங்களது திட்டங்களை போல த.வெ.க., அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது. அ.தி.மு.க., ஆட்சியில் மருத்துவ படிப்புக்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய, 7.5 சதவீத இடஒதுக்கீட்டை, த.வெ.க., வழங்கியது போல தற்போது காட்டிக் கொள்கின்றனர்.

தேர்தலின்போது, 'அ.தி.மு.க., ஆட்சியில் எந்ததிட்டங்களுமே செய்யலை'ன்னு குற்றஞ் சாட்டியவங்க, இப்ப அவங்க சாதனைகளையும் குறிப்பிடுறாங்களே!

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி அறிக்கை: உலகப்புகழ் பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான, 100 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலத்தை, சட்டத்துக்கு மாறாக மூன்று தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்தது எப்படி? இரவுகளில் வீடு புகுந்து திருடுவதை பற்றியும், 'பிக்பாக்கெட்' அடிப்பதை பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பட்டப்பகலில் முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தையே பத்திரப்பதிவு செய்து, கொள்ளை அடித்தது எப்படி சாத்தியமாயிற்று?

அந்த பத்திரப்பதிவை உயர் நீதிமன்றம் ரத்து பண்ணிட்டாலும், கோவில் சொத்தை, 'ஆட்டை' போட நினைத்தவர்களை கடுமையா தண்டிக்கணும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us