தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : ஆக 19, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 19, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வி.சி.க., தலைவர் திருமாவளவன் பேச்சு:


நாம் இப்போது அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருக்கிறோம். இனி வருங்காலத்தில் வி.சி.க., தமிழகத்தில் ஆளுங்கட்சியாக வரவேண்டும். இத்தனை காலம் ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்தோம். வி.சி.க.,வும், த.வெ.க.,வும் தமிழக அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும்; வி.சி.க.,வும் ஆளுங்கட்சியாக பரிணமிக்கும்.

உங்க தலைமையில் ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி, அதுல தி.மு.க., - அ.தி.மு.க.,வை எல்லாம் சேர்த்தால் கூட, உங்களது ஆளுங்கட்சி கனவு நனவாவது கேள்விக்குறி தான்!

தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி எம்.பி., அறிக்கை:


கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு உள்ள, 'செஸ்' வரி உள்ளிட்ட நிதி அதிகாரங்களை பறிக்கும் வகையில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்த மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றப் பட்டுள்ளது.

இச்சட்ட திருத்தம், மாநிலத்தின் நிதிச்சுமையை அதிகரிப்பதோடு, மாநில அரசின் அதிகார வரம்புக்குள் உள்ள நிலத்தின் மீது மத்திய அரசு அதிகாரம் செலுத்த முயல்வது, கூட்டாட்சி தத்துவத்திற்கு முற்றிலும் முரணானது. 'தமிழகத்தை பொருளாதார இறையாண்மை கொண்ட மாநிலமாக மாற்றுவோம்' என, தேர்தல் வாக்குறுதி அளித்ததை மறந்து விட்டதால், த.வெ.க., அரசு அமைதி காக்கிறதா?

பார்லிமென்டில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டபோது, உங்க கட்சி எம்.பி.,க்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிச்சீங்களா அல்லது தமிழகத் தில் மட்டும் இதை பத்தி பேசுறீங்களா என்ற சந்தேகம் வருதே?

பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு:


த.வெ.க., ஆட்சியில் கொசஸ்தலை ஆற்றில், டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன. கழிவுநீர் கால்வாயாக கொசஸ்தலை ஆறு மாறுகிறதா? வழக்கம் போல எம்.எல்.ஏ.,க்களையும், அமைச்சர்களையும் வைத்து பாதிக்கப்பட்டவர்களிடம் சமாதான பேச்சு நடத்தி, பிரச்னையை மூடி மறைப்பதை விட்டுவிட்டு, இந்த பேரழிவுக்கான உண்மையான காரணம் என்ன என்பதை, த.வெ.க., அரசு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.

சென்னையில் இருக்கும் ஆறுகளான கூவம், அடையாறில் எல்லாம் நல்ல தண்ணீர் ஓடுறது மாதிரி, கொசஸ்தலை ஆற்றை மட்டும் குற்றம் சொல்றாரே!

தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மயிலை வேலு அறிக்கை:


த.வெ.க., ஆட்சியின் 100 நாட்களில், புதிய ஆட்சியின் வேகத்தை விட, ஆட்சி நடத்துவதன் கடினத்தையே அதிகமாக பார்க்க வேண்டியுள்ளது. திரையில், 100 நாட்கள் ஓடிய படம் வெற்றி என சொல்லலாம். ஆட்சியில், 100 நாட்கள் கடந்ததற்காக மட்டும் வெற்றி என சொல்ல முடியாது.

த.வெ.க., அரசை கவிழ்க்க, உங்க கட்சியினர் நடத்திய குதிரை பேரத்தை எல்லாம் முறியடிச்சு, 100 நாட்கள் ஆட்சியை நடத்தியதே பெரிய சாதனை தான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us