தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

1


PUBLISHED ON : செப் 27, 2026 01:18 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 27, 2026 01:18 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வி.சி.க., பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி அறிக்கை:

ஜாதி ஒழிப்பையும், தமிழ் தேசியத்தையும் மூச்சுக்காற்றாய் முன்நிறுத்தி, உழைக்கும் தமிழ் மக்களை அரசியல் சக்தியாக அணி திரட்டுவதற்காகவே, தன் ஒட்டுமொத்த வாழ்வையும் ஒப்படைத்தவர் திருமாவளவன். பொது வாழ்வில் அவர், 35 ஆண்டுகள் நிறைவு செய்ததை வாழ்த்தும் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில், டி.என்., 07 சி.எம்., 2031 என்ற பதிவெண் கொண்ட வாடகை கார் பயன்படுத்தப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ள முடியாமல், திருமாவளவன் மீது வழக்கம் போல் சிலர் வன்மத்தை சிந்துகின்றனர். அவர்களின் அரசியலை வெகுவிரைவில் அம்பலப்படுத்துவோம்.

கார் நம்பர் கதையை விடுங்க... 2031ல் திருமாவளவன் முதல்வராகணும் என்ற ஆசை உங்களுக்கு இல்லையா?

தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி எம்.பி., பேச்சு:

சமூகத்தில் மதிப்பிற்குரியவர்களாக கருதப்படுபவர்கள், குழந்தைகள் மீது இவ்வளவு கொடூரமான செயல்களில் ஈடுபட்டிரு ப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

நீண்ட காலமாக இத்தகைய கொடுஞ்செயல்களில் அவர்களால் ஈடுபட முடிந்திருப்பதும், அதற்கான சூழல் சமூகத்தில் உருவாகியிருப்பதும் மிகுந்த கவலை அளிக்கிறது.

'ஜெம்' வீரமணி செய்த கொடுமைகள் எல்லாம் கடந்த தி.மு.க., ஆட்சியில் தான் நடந்திருக்கு... அப்பவே நடவடிக்கை எடுக்காம இருந்ததை நாசுக்கா குத்திக் காட்டுறீங்களோ?

தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், சென்னை மேற்கு மாவட்டச் செயலருமான மயிலை வேலு பேட்டி:

இன்று மக்கள் கேட்பது, மின்வெட்டுக்கு எப்போது தீர்வு? சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டுக்கும், அரிவாள் வெட்டு கலாசாரத்திற்கும் என்ன பதில்? இவற்றை எதிர்கொள்ள, மக்களுக்கு பதில் சொல்ல திறமையில்லை; தீர்வு காண திட்டமும் இல்லை. அதனால், தி.மு.க., மீது ஏதாவது பழி சுமத்தி, மக்களை திசை திருப்பலாம் என நினைக்க வேண்டாம்.

நீங்க குறிப்பிடும் சம்பவங்கள் எல்லாம், கடந்த கால தி.மு.க., ஆட்சியின் நீட்சி தானே!

மூத்த வழக்கறிஞரும், பா.ஜ., உறுப்பினருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அறிக்கை:

'ஜெம்' வீரமணி, காமத்தில் இந்த செயல்களை செய்யவில்லை. பட்டு, வேட்டியை கட்டிக் கொண்டு இப்படி அந்தரங்கத்தில் சிறுமியருடன் இருந்தால், அவரது தொழில் வளர்ச்சிக்கும், ஆயுளுக்கும் நல்லது என, யாரோ ஒரு ஜோதிடர் சொன்னாராம். அதை கேட்டு தான் வீரமணி அப்படி நடந்தாராம்.இதை கூறியவரிடம் நான், 'என்னய்யா கொடுமையாக இருக்கிறது. பதைபதைக்க நடந்த கொடூரங்களை மறைப்பதற்கு, இப்படி ஒரு முட்டு கொடுத்தல் தேவையா...? இதெல்லாம் உங்களுக்கே நியாயமாக இருக்கிறதா?' என கேட்டேன்.

யார், எப்படி முட்டு கொடுத்தாலும், 'ஜெம்' வீரமணி இனி ஆயுள் முழுக்க சிறையில தான் இருக்கணும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us