
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின் விளக்கு எரியுமா?
முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில் அருகே தெய்வநாயக்கர் வீதி முதல், சுந்தரராஜ் வீதி வரை, தெரு மின் விளக்கு எரியாமல் உள்ளது.
அருண், முதலியார்பேட்டை.
மேடு, பள்ளமான ரயில்வே சாலை
வாணரப்பேட்டை முருகசாமி நகர், ரயில்வே சாலை மேடு பள்ளமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆனந்தன், வாணரப்பேட்டை.
சாலை பள்ளங்கள் மூடப்படுமா?
புதுச்சேரி முக்கிய சாலைகளில் கேபிள் புதைக்க பள்ளம் தோண்டப்பட்டு, பல இடங்களில் மூடாமல் இருப்பதால், விபத்து அபாயம் உள்ளது.
காந்தி, புதுச்சேரி.
தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்
சந்தை புதுக்குப்பம் துர்கா கோவில் செல்லும் வழியாக, உயர்மின் அழுத்த மின் கம்பிகள் தாழ்வாக செல்வதை, மின்துறையினர் சீரமைக்க வேண்டும்.
ஜெயராஜ், சந்தை புதுகுப்பம்.