நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குண்டும் குழியுமான சாலை;
தவளக்குப்பம், அண்ணா நகர் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சிவா, தவளக்குப்பம்.
விதி மீறும் வாகனங்கள்
வில்லியனுாரில், சிக்னல்களில் விதியை மீறி வாகன ஓட்டிகள் கடந்து செல்வதை தடுக்க, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரஜினி முருகன், வில்லியனுார்.
சிக்னல் இயங்குமா?
கொக்குபார்க்கில், வாகன நெரிசலை தவிர்க்க சிக்னல் விளக்குகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்ணன், கொக்குபார்க்.
நிழற்குடை தேவை
தவளக்குப்பத்தில், பயணியர் நிழற்குடை இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
நர்மதா, தவளக்குப்பம்.