ADDED : மார் 05, 2025 04:34 AM

திருக்கனுார்: கூனிச்சம்பட்டு அரசு பள்ளியில் புகார் பெட்டி அமைக்கும் பணியை சப் இன்ஸ்பெக்டர் பிரியா துவக்கி வைத்தார்.
புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பாலியல் புகார்கள் மற்றும் மாணவர்களின் குறைகளை தெரிவிக்கும் பொருட்டு, பள்ளி வளாகத்தில் போலீசார் மூலம் புகார் பெட்டிகள் அமைக்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. திருக்கனுார் உட்பட கூனிச்சம்பட்டு, வாதானுார், சோரப்பட்டு அரசு பள்ளிகளில் புகார் பெட்டி அமைக்கும் பணி நேற்று நடந்தது. கூனிச்சம்பட்டு அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா, புகார் பெட்டியை அமைத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பள்ளி துணை முதல்வர் மோகனாம்பாள் உடனிருந்தார்.
காட்டேரிக்குப்பம் பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் போலீஸ் சார்பில் புகார் பெட்டி அமைக்கப்பட்டது.