நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலை ஆக்கிரமிப்பு
மரப்பாலம் முதல் முருங்கப்பாக்கம் வரை சாலையோர ஆக்கிரமிப்புகளால் வாகனங்கள் எளிதாக செல்ல முடிவதில்லை.
பாண்டியன், புதுச்சேரி.
சாலையில் ஜல்லி
முதலியார்பேட்டை கடலுார் சாலை ஆங்காங்கே பெயர்ந்து ஜல்லிகள் சிதறி கிடப்பதால் வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர்.
செல்வி, முதலியார்பேட்டை.
மாற்று வழியில் சென்ற பஸ்கள்
கடலுாரில் இருந்து இந்திரா சிக்னல் வழியாக செல்ல வேண்டிய பஸ்கள் முதலியார்பேட்டை வழியாக பஸ் நிலையத்திற்கு செல்கிறது.
முத்துக்குமரன், முதலியார்பேட்டை.
பயணிகள் அவதி
ஏ.எப்.டி., தற்காலிக பஸ் நிலையம் முன்பு சாலையில் குவிந்துள்ள சேறு சகதியால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
சேதுராமன், புதுச்சேரி.
போக்குவரத்து நெரிசல்
உப்பளம் அம்பேத்கர் சாலையோரம் வரிசையாக டிராவல்ஸ் பஸ் வேன்கள் நிறுத்தி வைத்திருப்பதால் தினசரி வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மனோஜ், புதுச்சேரி.

