சுகாதார சீர்கேடு
இந்திரா சிக்னல் அருகே வாய்க்காலில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
மதி, புதுச்சேரி.
சாலையில் திரியும் மாடுகள்
ரெட்டியார்பாளையம் சாலையில், மாடுகள் சுற்றி திரிவதால், விபத்து அபாயம் ஏற்படுகிறது.
கண்ணன், ரெட்டியார்பாளையம்.
சாலை பணி மந்தம்
நைனார்மண்டபத்தில் சாலை விரிவாக்கப் பணி ஆமை வேகத்தில் நடப்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
கதிரவன், மரப்பாலம்.
போக்குவரத்து நெரிசல்
காமராஜர் சாலையில் வாகனங்களை நிறுத்துவதால், அவசரத்திற்கு செல்லும் மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.
மணி, காமராஜர் நகர்.
விபத்து அபாயம்
மதகடிப்பட்டு - மடுகரை சாலையில் பள்ளி நேலியனுார் ரயில்வேகேட் அருகே சாலையோரம் மரங்கள் மற்றும் புதர் மண்டிக் கிடப்பதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது.
இலக்கியன், நல்லுார்.
பகலில் எரியும் மின் விளக்குகள்
மதகடிப்பட்டு மற்றும் திருபுவனை சர்வீஸ் சாலை, மடுகரை சாலை மற்றும் திருக்கனுார் சாலை உள்பட பல இடங்களில் தெரு மின் விளக்குகள் பல மாதங்களாக பகலிலும் எரிந்து கொண்டிருக்கிறது.
உமா வினாயகம், மதகடிப்பட்டு.