நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மடுகரை - கடலுார் சாலை படுமோசம்
மடுகரையில் இருந்து கடலுார் செல்லும் சாலை குண்டும், குழியுமாக படு மோசமான நிலையில் இருப்பதால் உடனடியாக சீரமைக்க வேண்டும்.
பாலகுரு, மடுகரை.
தொழிற்பேட்டை சாலையில் நெரிசல்
இ.சி.ஆரில் இருந்து கோரிமேடு செல்லும் பைக், கார் உள்ளிட்ட வானங்கள் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை வழியாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
தினகரன், தட்டாஞ்சாவடி.
பார்க்கிங் முறைப்படுத்தப்படுமா?
நேரு வீதியில் இரு சக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி செல்வதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
கண்ணன், புதுச்சேரி.
கழிவுநீரால் கொசு தொல்லை
தட்டாஞ்சாவடி அய்யப்பன் நகர், லட்சுமி தெருவில் காலிமனையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு தொல்லை அதிகமாக உள்ளது.
செல்வம், தட்டாஞ்சாவடி.
ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்
நெல்லித்தோப்பு, கங்கை அம்மன் கோவில் தெருவில் ஆக்கிரமிப்புகளால், போக்குவரத்து நெரில் ஏற்பட்டு வருகிறது.
மனோகரன், நெல்லித்தோப்பு.