கழிவுநீரால் துர்நாற்றம்
உழவர்கரை கரோன் வீதியில், வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது.
மேரி, உழவர்கரை.
நாய்கள் தொல்லை
நெல்லித்தோப்பு அண்ணா நகரில், சாலையில் நாய்கள் திரிவதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
பொற்செல்வி, நெல்லித்தோப்பு.
குண்டும் குழியுமான சாலை
அரியாங்குப்பம் ஓடைவெளி சாலை, குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து செல்கின்றனர்.
கணேசன், அரியாங்குப்பம்.
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா ?
நெல்லித்தோப்பு கங்கை அம்மன் கோவில் தெருவில், சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
ரவி, நெல்லித்தோப்பு.
சென்டர் மீடியன் அமைக்க வேண்டும்
வில்லியனுார் மூலக்கடை பகுதியில், பெரம்பை ரோடு விநாயகர் கோவில் எதிரில் வாகனங்கள் பிரிந்து செல்ல வசதியாக சென்டர் மீடியன் அமைக்க வேண்டும்.
ரஜினிமுருகன், வில்லியனுார்.
விதி மீறும் பஸ்களால் டிராபிக் ஜாம்
கடலுார் மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள் நுாறடி சாலை வழியாக பஸ் நிலையத்திற்கு செல்லாமல், முதலியார்பேட்டை வழியாக செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அண்ணாமலை, முதலியார்பேட்டை.