நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடிநீர் உப்பாக வருவதால் மக்கள் அவதி
அரியாங்குப்பம் சுதானா நகர், கலைமகள் வீதியில் குடிநீர் உப்பாக வருவதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
அங்கமுத்து, அரியாங்குப்பம்.
சாலை மோசமாக உள்ளது
புதுச்சேரி புஸ்சி வீதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ராமலிங்கம். உருளையன்பேட்டை.
மின் கம்பி தாழ்வாக செல்கிறது
மதகடிப்பட்டு, பிள்ளையார் கோவில் தெருவில், உயர்மின் அழுத்த கம்பி மிகவும் தாழ்வாக செல்வதால், விபத்து அபாயம் உள்ளது.
சக்திவேல், மதகடிப்பட்டு.
நாய்கள் தொல்லை
அரியாங்குப்பம், ஆர்.கே., நகரில், நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
ரவி, அரியாங்குப்பம்.

