நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாய்கள் தொல்லை
வில்லியனுார் தில்லை நகர், கம்பர் வீதியில், நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
பாரதி, வில்லியனுார்.
சர்வீஸ் சாலை மோசம்
அரும்பார்த்தபுரம் மேம்பாலம், வடக்கு சர்வீஸ் சாலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
குமார், அரும்பார்த்தபுரம்.
பாலத்தில் ஹைமாஸ் எரியுமா?
அரியாங்குப்பம் புதிய ஆற்று பாலத்தில், சில இடங்களில் மட்டும் ஹைமாஸ் விளக்கு எரியாமல் அப்பகுதி இருண்டு கிடக்கிறது.
கண்ணன், அரியாங்குப்பம்.
சாலை சீரமைக்கப்படுமா?
முதலியார்பேட்டை ரயில்வே கேட்டில், தோண்டப்பட்ட சாலையை சீர் செய்யாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர்.
ரவிச்சந்திரன், முதலியார்பேட்டை.

