ADDED : மார் 21, 2025 04:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குப்பைகளால் கொசு தொல்லை
எல்லைபிள்ளைச்சாவடி தந்தை பெரியார் நகர் 3வது குறுக்கு தெருவில், குப்பைகள் தேங்கி கிடப்பதால் கொசு தொல்லை அதிகரித்துள்ளது.
சரோஜா, தந்தை பெரியார் நகர்.
மாடுகளால் போக்குவரத்து இடையூறு
முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகர் 8வது குறுக்கு தெருவில், மாடுகள் சுற்றி திரிவதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
மதிவாணன், முருங்கப்பாக்கம்.
குண்டும் குழியுமான சாலை
தவளக்குப்பம் அண்ணா நகர் சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
சிவா, தவளக்குப்பம்.
பயணிகள் நிழற்குடை தேவை
பாக்கமுடையான்பட்டு ஏர்போர்ட் சாலையில் பயணிகள் நிழற்குடை இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ஆசியகுமார், பாக்கமுடையான்பட்டு.
கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்
மூலக்குளம் திருமலை தாயார் நகர், எஸ்.ஆர்., அவன்யு பகுதியில் வாய்க்கால் அடைத்து கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.
ராஜலிங்கம், மூலமக்குளம்.