ADDED : ஜன 08, 2026 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நுாலகம் பயன்பாட்டிற்கு வருமா?
ஆலங்குப்பம் அன்னை நகரில், நுாலகம் பயன்பாட்டில் இல்லாமல், காட்சி பொருளாகவே உள்ளது.
தெய்வசிகாமணி, ஆலங்குப்பம்.
மின் கம்பம் சேதம்
பாக்கமுடையான்பட்டு, ஜீவா காலனி மெயின் ரோட்டில், மின் கம்பம் சேதமாகி கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.
துரை, பாக்கமுடையான்பட்டு.
மின் விளக்கு எரியுமா?
அரும்பார்த்தபுரம் - மூலக்குளம் புறவழிச்சாலையில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
செல்வன், நைனார்மண்டபம்.
போக்குவரத்து நெரிசல்
உப்பளம் சாலையில், மீன் கடைகளால் போக்குவரத்து நெரிசலில், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கண்ணன், உப்பளம்.

