ADDED : அக் 27, 2026 04:25 PM
அ நிறம் | அளவு
பாலத்தில் தெரியும் கம்பி: நுாறடி சாலை ரயில்வே மேம்பாலத்தில் ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகில் பாலத்தில் கம்பி தெரிவதால் விபத்து ஏற்படும் முன் சீர் செய்ய வேண்டும்.
செல்வம், புதுச்சேரி.
தெரு நாய்கள் தொல்லை: சாரம் லெனின் வீதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
கிருஷ்ணா, புதுச்சேரி.
போக்குவரத்து இடையூறு: அரியாங்குப்பம் – வீராம்பட்டினம் சாலையில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
தினகரன், அரியாங்குப்பம்.
டவுன் பஸ் தேவை: தேங்காய்த்திட்டு பகுதிக்கு டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மகேஷ், தேங்காய்த்திட்டு.
