ADDED : நவ 28, 2026 01:07 AM
அ நிறம் | அளவு
போக்குவரத்து இடையூறு: தட்டாஞ்சாவடி அரசுப் பள்ளி அருகில் சாலையோரத்தில் கார்களை நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
மோகன், தட்டாஞ்சாவடி.
காலிமனையில் கழிவுநீர்
கதிர்காமம், ராமலிங்கம் நகர் 4வது குறுக்கு தெருவில் உள்ள காலிமனையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
விநாயகம், கதிர்காமம்.
கொசு தொல்லை
ஊசுடு தொகுதி கோபாலன் கடை அன்பு நகரில், கழிவுநீர் தேங்கி கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
நளினி, கோபாலன் கடை.
வாய்க்காலில் அடைப்பு
மண்ணாடிப்பட்டு சந்தை புதுக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவில், வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.
ஜெயராஜ், மண்ணாடிப்பட்டு.
