நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு
மூலக்குளம், திருமலை தாயார் நகர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி நின்று துர்நாற்றம் வீசி வருகிறது.
ராஜலிங்கம், மூலக்குளம்.
போக்குவரத்து இடையூறு
பாரதி வீதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாமல் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
செல்வன், முதலியார்பேட்டை.
ஆற்றில் குப்பைகள்
நோணாங்குப்பம் ஆற்றில் குப்பைகள், தண்ணீர் பாட்டில்களை போடுவதால், தண்ணீர் மாசு ஏற்பட்டு வருகிறது.
கண்ணன், நோணாங்குப்பம்.
பயணியர் நிழற்குடை தேவை
தவளக்குப்பத்தில், பயணியர் நிழல்குடை இல்லாமல் பொதுமக்கள் வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.
ரமேஷ், தவளக்குப்பம்.