நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு
ராஜ்பவன், கணேஷ் நகர், 5வது குறுக்கு தெருவில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.
ரமணி, ராஜ்பவன்.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
காலாப்பட்டு மாத்துார் ரோடு, சட்டக்கல்லுாரி அருகே குப்பைகள் தேங்கி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
பிரேமா, காலாப்பட்டு.
மாடுகளால் போக்குவரத்து இடையூறு
முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகர் 5வது குறுக்கு தெருவில், மாடுகள் சுற்றித்திரிவதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
மதிவாணன், முருங்கப்பாக்கம்.
பயணிகள் நிழற்குடை தேவை
மரப்பாலம் சந்திப்பில், பயணிகள் நிழற்குடை இல்லாமல் மக்கள் வெயிலில் நின்று அவதியடைந்து வருகின்றனர்.
ராணி, மரப்பாலம்.