நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலையில் பள்ளம் மூடப்படுமா?
உப்பளம் அம்பேத்கர் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, பல நாட்கள் ஆகியும் மூடாமல் இருந்து வருகிறது.
ரவி, கொம்பாக்கம்.
தெரு விளக்கு எரியுமா?
காமராஜர் நகர் தொகுதியில் சூரியகாந்தி நகர், முதல் குறுக்கு தெருவில் தெரு, மின் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
கிருஷ்ணா, புதுச்சேரி.
குண்டும் குழியுமான சாலை
தட்டாஞ்சாவடி கம்பளி மட சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கதிரேசன், தட்டாஞ்சாவடி.
சேறும் சகதியுமாக மாறிய பஸ் நிலையம்
மழை பெய்யும் போது சேறும், சகதியுமாக மாறும் தற்காலிக பஸ் நிலையத்தை உடனடியாக புதிய பஸ் நிலையத்திற்கு மாற்ற வேண்டும்.
சதீஷ், புதுச்சேரி.