நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போக்குவரத்து நெரிசல்
இ.சி.ஆர்., சாலையில் இருந்து வாகனத்தில் செல்பவர்கள் கோரிமேடு பகுதிக்கு செல்ல தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை சாலையை பயன்படுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பாஸ்கர், தட்டாஞ்சாவடி.
பயணியர் நிழற்குடை தேவை
தவளக்குப்பத்தில், பயணியர் நிழல்குடை இல்லாமல் இருப்பதால், பொதுமக்கள் வெயிலில் நின்று அவதியடைந்து வருகின்றனர்.
குமரன், தவளக்குப்பம்.
ஹைமாஸ் விளக்கு எரியுமா?
நோணாங்குப்பம் நியூ காலனி 2வது குறுக்கு தெருவில் ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
மாணிக்கம், நோணாங்குப்பம்.
குடிநீர் விரயம்
காமராஜர் நகர் தொகுதி, ரெயின்போ நகர் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து இரண்டு நாட்களாக தண்ணீர் வாய்க்காலில் வழிந்தோடி வீணாகிறது.
ராமசாமி, ரெயின்போ நகர்.