நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடிநீர் பற்றாக்குறை
சாரம் பாலாஜி நகர் மெயின் ரோட்டில், அழுத்தம் குறைவாக இருக்கும் காரணத்தால், குடிநீர் குறைவாக வருவதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
விக்னேஷ், சாரம்
குப்பைகள் குவிந்து துர்நாற்றம்
விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழி சாலை அரியூர் மெயின் கேட் பஸ் நிறுத்தம் அருகில் பல நாட்களாக குவிந்துள்ள குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.
ராணி, அரியூர்.
ஆபத்தான மின் கம்பம்
தட்டாஞ்சாவடி, காந்தி நகர் குடிநீர் தண்ணீர் தொட்டி அருகில் மின் கம்பம் கீழே விழும் நிலையில் உள்ளது.
மோகன், தட்டாஞ்சாவடி.
போக்குவரத்து இடையூறு
ரெட்டியார்பாளையம், சுதாகர் நகரில் மாடுகள் சுற்றித் திரிவதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
சத்தியமூர்த்தி, ரெட்டியார்பாளையம்.