நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலையில் குவிந்த குப்பைகள்
உருளையன்பேட்டை, அண்ணா திடலில், குப்பைகள் சாலையில் குவிந்து கிடக்கிறது.
மகேஸ்வரன், உருளையன்பேட்டை.
வாய்க்காலில் அடைப்பு
சாரம், முத்துரங்க செட்டி நகர், 4வது குறுக்கு தெருவில், வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுகழிவுநீர் தேங்கி நிற்கிறது.
சிவபிரகாசம், சாரம்.
குடிநீர் தட்டுப்பாடு
சாரம், பாலாஜி நகர், மெயின் ரோடு பகுதியில் குடிநீர் குறைவாக வருவதால், அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
விக்னேஷ், சாரம்.
குண்டும் குழியுமான சாலை
லாஸ்பேட்டை, ராஜாஜி நகர், முதல் மெயின் ரோடு குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
ராஜன், லாஸ்பேட்டை.