நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இரவில் ஜிப்மருக்கு பஸ் வசதி
புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு இரவு நேரத்தில் டவுன் பஸ் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பிரனேஷ், கோரிமேடு.
குப்பைகள் தேக்கம்
ராஜ்பவன் தொகுதி, சுய்ப்ரேயன் வீதியில் குப்பை வண்டி சரிவர வராததால், குப்பைகள் தேங்கி கிடக்கிறது.
ராஜேஸ்வரி, ராஜ்பவன்.
போக்குவரத்து இடையூறு
தட்டாஞ்சாவடி, அய்யனார் கோவில் வீதியில் தேவையற்ற கட்டட பொருட்கள் சாலையில் கிடப்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
குமார், தட்டாஞ்சாவடி.
கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு
லாஸ்பேட்டை, ஏர்போர்ட் ரோடு, பாரதியார் சாலை அருகில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
ரமேஷ், லாஸ்பேட்டை.