நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெரு நாய்கள் தொல்லை
ரெயின்போ நகர், கிழக்கு பகுதி 5வது குறுக்கு தெருவில், தெரு நாய்கள் அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
பாரதி, ரெயின்போ நகர்.
ஜிப்மருக்கு இரவில் பஸ்
புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு இரவு நேரங்களில் டவுன் பஸ் இல்லாததால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ராணி, புதுச்சேரி.
போக்குவரத்து இடையூறு
சாரம், பாலாஜி நகர் 3வது குறுக்கு தெருவில், சாலையில் மணல் கொட்டி இருப்பதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
கண்ணன், சாரம்.
போக்குவரத்து நெரிசல்
காமராஜர் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, சீர் செய்யாமல் இருப்பதால், வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
ரவி, காமராஜர் சாலை.