ADDED : ஜூன் 28, 2025 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துர்நாற்றம் வீசுகிறது
நெல்லித்தோப்பு, மீன் மார்க்கெட் அருகில் உள்ள செப்டிக் டேங்கில் இருந்து கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசி வருகிறது.
விஸ்வநாதன், புதுச்சேரி.
பள்ளி வளாகத்தில் மாடுகள்
முருங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாடுகள் கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சக்தி, முருங்கப்பாக்கம்.
மோசமான சாலை
குருமாம்பேட், கால்நடை மருத்துவமனை செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.
நாகலட்சுமி, குருமாம்பேட்.
மேம்பாலம் சீரமைப்பு மந்தம்
நுாறடி சாலை ரயில்வே மேம்பாலம் சீரமைக்கும் பணி, ஆமை வேகத்தில் நடப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கதிரவன், புதுச்சேரி.