ADDED : ஜூன் 30, 2025 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெரு விளக்கு எரியுமா?
லாஸ்பேட்டை அவ்வை நகர் 16வது குறுக்கு தெருவில், தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
ராஜன், லாஸ்பேட்டை.
பள்ளி வளாகத்தில் மாடுகள்
முருங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாடுகள் கட்டியிருப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சக்தி, முருங்கப்பாக்கம்.
ஜிப்மருக்கு இரவில்
டவுன் பஸ் தேவை
ஜிப்மர் மருத்துவமனைக்கு இரவு நேரத்தில், டவுன் பஸ் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மதி, புதுச்சேரி.
குண்டும், குழியுமான சாலை
மணவெளி சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
மருதவாணன், மணவெளி.