குண்டும் குழியுமான சாலை
நைனார்மண்டபம் பிரியதர்ஷி நகரில் சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
கிருஷ்ணன், புதுச்சேரி.
-----------------------------------------
பள்ளி வளாகத்தில் மாடுகள்
முருங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாடுகள் கட்டியிருப்பதால் மாணவர்கள் அச்சமடைந்துடன் சென்று வருகின்றனர்.
சக்தி, முருங்கப்பாக்கம்.
-------------------------------------------
ஆக்கிரமிப்புகளால் இடையூறு
தென்னஞ்சாலை ரோட்டில், ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
கவிதா, தென்னஞ்சாலை.
--------------------------------------------
ஜிப்மருக்கு இரவு நேர பஸ் இயக்கக்கோரிக்கை
புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு இரவு நேரங்களில் டவுன் பஸ் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
அபிராமி, புதுச்சேரி.