நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குண்டும் குழியுமான சாலை
நைனார்மண்டபம் பிரியதர்ஷி நகரில் சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
கிருஷ்ணன், புதுச்சேரி.
ஆக்கிரமிப்புகளால் இடையூறு
தென்னஞ்சாலை ரோட்டில், ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
கவிதா, தென்னஞ்சாலை.
மேம்பாலம் சீரமைப்பு பணி மந்தம்
நுாறடி சாலை ரயில்வே மேம்பாலம் சீரமைக்கும் பணி, ஆமை வேகத்தில் நடப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கதிரவன், புதுச்சேரி.
பாராக மாறி வரும் பஸ் ஸ்டேண்ட்
புதிய பஸ் ஸ்டேண்ட்டில் இரவு நேரங்களில் மது குடிப்பவர்களால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
மகேஷ், புதுச்சேரி.