நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெரு விளக்கு எரியுமா?
கருவடிக்குப்பம் கென்னடி கார்டன், பீஷ்மர் தெருவில், தெரு விளக்கு கடந்த ஒரு வாரமாக எரியாமல் இருண்டு கிடக்கிறது.
பாஸ்கர், கருவடிக்குப்பம்.
கொசு தொல்லை
ராஜ்பவன், தியாகராஜா வீதியில் கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சாரதாதேவி, ராஜ்பவன்.
பாம்புகள் நடமாட்டம்
மணவெளி, டி.என்.பாளையம், சமுதாய நலக்கூடத்தில், புதர்கள் மண்டி கிடப்பதால், விஷ பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
சிவபெருமாள், மணவெளி.
பள்ளி வளாகத்தில் மாடுகள்
முருங்கப்பாக்கம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாடுகள் கட்டியிருப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சக்தி, முருங்கப்பாக்கம்.
நாய்கள் தொல்லை
முருங்கப்பாக்கம், கணபதி நகரில், தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், அப்பகுதியில் குடியிருப்பவர்கள் அச்சமடைகின்றனர்.
நேதாஜி, முருங்கப்பாக்கம்.