ADDED : ஜூலை 16, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மெகா பள்ளத்தால் விபத்து
உறுவையாறு வாய்க்கால் மேட்டுத் தெருவில், பெரிய அளவில் பள்ளங்கள் இருப்பதால், வாகன விபத்துக்கள் நடந்து வருகிறது.
புருேஷாத்தமன், உறுவையாறு.
குப்பையால் சுகாதாரசீர்கேடு
காமராஜர் நகர் தொகுதி, சூரியகாந்தி நகர், முதல் தெருவில், குப்பைகள் சாலையில், தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
இளங்கோ, புதுச்சேரி.
சாலை மோசம்
இந்திரா நகர் தொகுதி, இஸ்ரவேல் நகரில் சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
ஜான்சன், புதுச்சேரி.
பிளாஸ்டிக் பாட்டில் குவியல்
முத்தியால்பேட்டை, ஜிஞ்சர் ஓட்டல் அருகில் உள்ள வாய்க்கால் பாலத்தின் அடியில், பிளாஸ்டிக் காலி பாட்டில்கள் அதிகளவில் தேங்கி கிடக்கிறது.
குமரன், முத்தியால்பேட்டை.

