ADDED : ஜூலை 22, 2025 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போக்குவரத்திற்கு இடையூறு லாஸ்பேட்டை தாகூர் நகர் 3வது, மெயின் ரோடு, 10வது குறுக்கு தெருவில் வாய்க்காலில் உள்ள சிலாப் சேதமடைந்துள்ளதால், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
நாகராஜன், லாஸ்பேட்டை. நாய்கள் தொல்லை லாஸ்பேட்டை தாகூர் நகர் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
காந்தி, லாஸ்பேட்டை. வாய்க்காலில் கழிவுநீர் தேக்கம் வில்லியனுார் வசந்தம் நகர், வ.உ.சி., வீதியில் வாய்க்கால் அடைத்து கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.
வாசுதேவன், வில்லியனுார். ஆக்கிரமிப்புகளால் இடையூறு தென்னஞ்சாலை ரோட்டில், ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
கவிதா, தென்னஞ்சாலை.