நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெரு விளக்கு எரியுமா? மரப்பாலத்தில் இருந்து முருங்கப்பாக்கம் வரையிலான சாலையில், தெரு விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது.
லட்சுமணன், புதுச்சேரி. போக்குவரத்து இடையூறு ராஜ்பவன் கொசக்கடை வீதியில், இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து இடையூறாக உள்ளது.
கண்ணன், புதுச்சேரி. ஜிப்மருக்கு இரவில் பஸ் தேவை ஜிப்மர் மருத்துவமனைக்கு இரவு நேரத்தில் டவுன் பஸ் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மணிவண்ணன், கோரிமேடு. குண்டும் குழியுமான சாலை மணவெளி சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
ரவிச்சந்திரன், அரியாங்குப்பம். தெரு நாய்களால் தொல்லை நைனார்மண்டபம் தென்னஞ்சாலை ரோட்டில் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்வோரை தெரு நாய்கள் துரத்துவதால் விபத்து அபாயம் உள்ளது.
குமரவேல், நைனார்மண்டபம்.