பூங்காவில் குடிநீர் வசதி தேவை காமராஜர் நகர் தொகுதி, ரெயின்போ நகர் சிறுவர் பூங்காவில் குடிதண்ணீர் வசதி இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கல்யாணம்,
ரெயின்போ நகர்.
குண்டும் குழியுமான சாலை தவளக்குப்பம், அண்ணாநகரில் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
சந்திரன், தவளகுப்பம். ஆக்கிரமிப்புகளால் இடையூறு ரெட்டியார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், உயர்நிலைப் பள்ளி அருகில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
சித்தாந், மோரிசான் தோட்டம். தெரு நாய்கள் தொல்லை உழவர்கரை நண்பர்கள் நகர் பகுதியில் தெரு நாய் தொல்லையால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
சாரா, நண்பர்கள் நகர். பஸ் வராததால் அவதி விழுப்புரம் செல்லும் பஸ்கள் வில்லியனுார் உள்ளே வராமல் பைபாஸ் வழியாக செல்வதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ரஜினி முருகன், வில்லியனூர் கழிவு நீர் தேக்கம் வில்லியனுார் அருகே மணவெளியில் வலம்புரி விநாயகர் நகர், ஐயனார் கோவில் வீதி விரிவு சாலையில் கட்டுமான பொருட்களை சாலையில் கொட்டியுள்ளதால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கியுள்ளது.
கிருஷ்ணா, மணவெளி.