கழிவுநீர் தேங்குவதால் கொசு உற்பத்தி நைனார் மண்டபம் பாரதி வீதியில் வாய்க்கால் அடைத்து கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசு உற்பத்தி அதிகமாக இருக்கிறது.
லட்சுமணன், நைனார்மண்டபம்.
மாடுகளால் போக்குவரத்து இடையூறு ராஜ்பவன் பாரதி வீதியில் மார்க்கெட் அருகே மாடுகள் சுற்றி திரிவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
கல்யாணம், புதுச்சேரி.
திருபுவனையில் சுகாதார சீர்கேடு திருபுவனையில் குப்பை வண்டி சரிவர வராமல் இருப்பதால், குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
திருநாவுக்கரசு, திருபுவனை.
நாய்கள் தொல்லை ஜிவானந்தபுரம் எம்.ஜி.ஆர்., வீதி 4வது குறுக்கு தெருவில், நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
கலைச்செல்வி, ஜீவானந்தபுரம்.
குறைந்த மின் அழுத்தத்தால் மக்கள் பாதிப்பு இந்திராகாந்தி தொகுதி இஸ்ரவேல் நகரில், குறைந்த மின் அழுத்தம் வருவதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மீனாட்சி, இஸ்ரவேல் நகர்.

