
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெருவிளக்கு எரியவில்லை உருவையாறு சங்கராபரணி ஆற்று பகுதியில் தெருவிளக்கு எரியாமல் உள்ளதால் வாகன விபத்துகள் ஏற்படுகிறது.
வீரமணி, உருவையாறு. போலீஸ் இல்லாததால் டிராபிக் நெல்லித்தோப்பு - காராமணிக்குப்பம் சந்திப்பில் டிராபிக் போலீஸ் பணியில் இல்லாததால் வாகன போக்குவரத்து பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது.
செல்வன், நைனார்மண்டபம். குண்டும், குழியுமான சாலை மூலக்குளத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் ஆங்காங்கே குண்டும், குழிகளாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பயணிக்க சிரமப்படுகின்றனர்.
செந்தில், மூலக்குளம்.