ADDED : ஆக 19, 2025 07:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குண்டும், குழியுமான சாலை இந்திரா நகர் தொகுதி அகத்தியர் கோட்டம் பகுதியில் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ராதாகிருஷ்ணன், புதுச்சேரி. மின் விளக்கு எரியவில்லை மரப்பாலம் முதல் முருங்கப்பாக்கம் வரை சாலையில் மின் விளக்கு எரியாமல் இருப்பதால் வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
லட்சுமணன், புதுச்சேரி. சாலை அமைக்க வேண்டும் ரெட்டியார்பாளையம் அன்னை பெரிய நாயகி நகர், 2வது மற்றும் 3வது குறுக்கு தெருவில் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலாயுதம், ரெட்டியார்பாளையம். பேனர்களால் இடையூறு கரையாம்புத்துார் அரசு பள்ளி எதிரில், பேனர்கள் வைத்துள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
முத்து, புதுச்சேரி.