ஜிப்மருக்கு இரவில் பஸ் தேவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு இரவு நேரங்களில் டவுன் பஸ் இல்லாமல் நோயாளிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மாரியம்மாள், கோரிமேடு. மாடுகளால் கொசு தொல்லை லாஸ்பேட்டை மேற்கு கிருஷ்ணா நகரில், சாலையில் மாடுகளை கட்டி வைத்துள்ளதால், கொசு தொல்லை அதிகமாகி வருகிறது.
மணிவண்ணன், லாஸ்பேட்டை. தெரு நாய்கள் தொல்லை கனகன் ஏரி பகுதியில், தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
ரமேஷ், ரெட்டியார்பாளையம். ஆக்கிரமிப்புகளால் இடையூறு கம்பன் நகர் பஸ் நிறுத்தம் அருகில் சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
ரமணி, கம்பன் நகர். பஸ் நிலையத்தில் மது அருந்தும் குடிமகன்கள் புதிய பஸ் நிலையம் உள்ளே இரவு நேரத்தில், மது குடிப்பதால், பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
மாலதி, புதுச்சேரி.