நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடிநீருடன் கழிவுநீர் கலப்பு மதகடிப்பட்டு, மேட்டுத்தெருவில், குடிநீருடன், கழிவுநீர் கலந்து வருவதால் தொற்று நோய் ஏற்படும் அபாய நிலை உள்ளது.
வேல்முருகன், மதகடிப்பட்டு. அடிப்படை வசதி இல்லை உறுவையாறு சுடுகாடு மற்றும் இடுகாட்டில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவை. மீனாட்சி, உறுவையாறு. கரையை பலப்படுத்த கோரிக்கை பாகூர் மணமேடு, தென்பெண்ணை ஆற்றன் கரையை பலத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமகிருஷ்ணா, பாகூர். சுற்றுச்சுவர் சேதம் தட்டாஞ்சாவடி சுப்பையா நகர், சுடுகாடு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து, சீர் செய்யாமல் இருந்து வருகிறது. முத்துகுமார், தட்டாஞ்சாவடி.