நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆகாயத் தாமரை அகற்றப்படுமா உறுவையாறில் உள்ள குடுவையாறு ஆற்றில் ஆகாய தாமரைகள் அதிகமாக படர்ந்துள்ளதால், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுந்தரம், உறுவையாறு. நாய்கள் தொல்லை ஜீவானந்தபுரம் அன்னை பிரியதர்ஷினி வீதியில், தெரு நாய்களின் தொல்லையால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
தினேஷ், ஜீவானந்தபுரம். இரவில் ஜிப்மருக்கு பஸ் வசதி தேவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு இரவு நேரங்களில் டவுன் பஸ் இயக்க வேண்டும்.
சரஸ்வதி, கோரிமேடு. வாகன ஓட்டிகள் அவதி அரியாங்குப்பம் மணவெளி சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மதிவாணன், அரியாங்குப்பம்.