ADDED : அக் 08, 2025 08:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலையில் குப்பை குவியல் இந்திரா நகர் தொகுதி, கோவிந்த பேட்டை, நெல்லுமண்டி வீதியில் குப்பை வண்டி வராமல், குப்பைகள் சாலையில் சிதறி கிடக்கிறது.
தமிழ்மகன், புதுச்சேரி. தெரு நாய்கள் தொல்லை தட்டாஞ்சாவடி கொக்குபார்க் அருகே தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
சாமூண்டிஸ்வரி, தட்டாஞ்சாவடி. பராமரிப்பு இல்லாத பூங்கா லாஸ்பேட்டை ஏர்போர்ட் ரோட்டில் உள்ள சிறுவர் பூங்கா பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
சாய்ராம், லாஸ்பேட்டை. பயணியர் நிழற்குடை தேவை உறுவையாறு தனியார் பள்ளி அருகே நிழற்குடை இல்லாமல் மக்கள் வெயிலில் அவதிப்பட்டு வருகின்றனர்.
வீரமணி, உறுவையாறு.