
தெரு விளக்குகள் அமைக்கப்படுமா? வழுதாவூர்- குமாரப்பாளையம் சாலையில் தெருமின் விளக்குகள் அமைக்கப்படாததால் இருள்சூழ்ந்து விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
சங்கர், வழுதாவூர். வாகன ஓட்டிகள் அவதி பாக்கம் கூட்ரோடு - ஏம்பலம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
விஜயகுமார், நெட்டப்பாக்கம். ைஹமாஸ் விளக்கு எரியுமா? பண்டசோழநல்லுார் கிராமத்தின் முக்கிய சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள நான்கு ைஹமாஸ் விளக்குகள் எரியாததால், இருள்சூழ்ந்து காணப்படுகிறது.
குமார், பண்டசோழநல்லுார். அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையின் வயல்வெளி சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள தெருமின் விளக்குகள் எரியவில்லை.
ராம், ரெட்டியார்பாளையம். சுகாதார சீர்கேடு கரியமாணிக்கம் வயல்வெளி சாலையில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
முருகன், கரியமாணிக்கம். சாலை சேதம் மூலக்குளம் பஸ் நிறுத்தம் எதிரே சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
சிவக்குமார், மூலக்குளம்.

